தயாரிப்பாளர்...தங்கதுரை... வெற்று உடம்பில்... லுங்கியை இடுப்புக்கும் மார்புக்கும் மத்தியில் கட்டியிருந்தபடி... ஹாலுக்குள்.. வந்து சோபாவில் அமர்ந்தார்
சார்...சார்...சார்... கதவை தட்டியவாறு..ஒரு இளைஞர்....வெளியே..
யாருப்பா...அது உள்ள வா...
சார் வணக்கம்... என் பேரு.. நந்தா... பிலிம் இன்ஸ்டிடுட்ல டி.எஃப்.டி படிச்சிருக்கேன்..எங்கிட்டே..மூன்று கதைகள்...இருக்கு சொல்லலாம்னு வந்திருக்கேன்...
அப்படியா... வா... உட்காரு.. மூன்று கதையும் சொல்லி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
சார்... அப்படியே...சொன்னா.. ஆறு மணி நேரம் ஆகும் இல்ல விட்டு விட்டு சொன்னா..எட்டு மணி நேரம் ஆகும்..
அப்படியா...சரி என்னா செய்யற..இப்ப...மணி..10 ஆகுது இல்ல..........டீ சாப்டு..ரெடியாயிடு... கதை சொல்ல...நான் போய் பூஜையை முடிச்சிட்டு வரேன்...
ஏய்... வள்ளி...ஹால்ல...சோபாவில இருக்கும் நந்தாவிற்கு..ஒரு டீயை..கொடு..
காலை மணி 10.30....
நந்தா...மணி..ஆயிடுச்சா... ஆரம்பிக்கலாமா....
தங்கதுரை... உள்ளே....பார்த்து... மனைவி, மகன், மகள்..மருமகன், மருமகள்..எல்லோரையும் ஹால்ல..கூப்பிட்டு உட்கார வைச்சி... நந்தாவை கதை சொல்ல சொன்னாரு...
நந்தா...ஒரு ஊர்ல... என்று ஆரம்பித்து... நாலு மணி நேரத்தில்..இரண்டு கதைகளை...அழகாக...சொல்லி சொல்லி மனதில் பதிய விட்டார்.... இடையில் மதியச் சாப்பாடு..தயாரிப்பாளர்..வீ்ட்டிலேயே...முடிச்சதும் ..அடுத்த இரண்டு மணி நேரத்தில்..மூன்றாவது கதையையும் சொல்லி முடிச்சார்...
ஹாலில்...கதைகளை..கேட்டவர்கள்...அப்படியே... நந்தாவை..பார்த்து... கொஞ்சம்..சிரித்தனர்..கொஞ்சம் சிலிர்த்தனர்...கொஞ்சம்.. சினந்தனர்...கொஞ்சம்..சிவந்தனர்..கொஞ்சம்.. சிந்தினர்..கண்ணீர்த்துளிகளை..
தயாரிப்பாளர்..தங்கதுரை...தன் மகனை பார்த்து ஒரு 500 ரூபாயை..நந்தாவிடம்..கொடுக்கச்சொன்னார்.. வாங்கிய...நந்தாவின்..நிலை....கொஞ்சம் சிரிப்பு... கொஞ்சம்..சிலிர்ப்பு..கொஞ்சம்..சினம்.. கொஞ்சம்..சிவந்த..முகம்... கடைசியில்...கொஞ்சம் கண்ணீர்த்துளிகளுடன்..முகம் மாறி வெளியே சென்றார்......
நந்தா...யார்....?
குடுமத்தினரின்... நெஞ்சத்திலும் இடம் பிடித்த.. இந்த இளைஞர்...யார்?
மூன்று கதைகளில்... ஹாலில்..உள்ளவர்களின்... மனதில் பலவிதமான.. ஈர்ப்புகளை.. வெளிப்படுத்திய...இந்த இளைஞர் யார்?
......................
........................................................
..........................................................................
19 ஆண்டுகளுக்கு முன்னர்... இதே...தங்கதுரை... ஒரு கிராமத்தில்... படம் பிடிக்கச்சென்றபொழுது... ஒரு பெண்ணையும் சேர்த்து பிடித்தவர்... ஆம்... அந்த பெண்ணின்... அழகில் இவர் மயங்கினார்... அந்தப்பெண்ணும்..இவர்..மீது...ஏற்பட்ட...ஈர்ப்பில்... தன்னை மறந்தாள்... நந்தாவை தந்தாள்......
இருப்பினும்... கூலி வேலை..செய்தே...தன் மகனை... ஆளாக்கிய...நந்தாவின் தாய்... சாவதற்கு முந்தினம்...நந்தாவிடம்... தங்கதுரையைப் பற்றி..சொல்லும்பொழுதே... உயிர்விட்டாள்...இடையில்...ஒரு பாடலின் வரி....ஏதோ..ஒரு மோகம்.. ஏதோ..ஒரு தாகம்... என்ற... கோழி கூவுது....பாடலை... மட்டும்..திரும்ப திரும்ப சொன்னாள்...
ஆம்...அந்த பாடலை... இருவரும் பாடி தான்... தங்களை மறந்து...பறந்தனர்..ஆனந்தத்தில்...
தங்கதுரை... ஒரு பாடலை..மட்டும்...கேக்கும்பொழுது...பழைய..நினைவுகளுக்கு ஆளாவார்..............போகப்போகா மறந்தே..போனார்... பின்வரும்...காலங்களில்... படம் எடுப்பதையும்... குறைத்துக்கொண்டே..வந்தார்...
இரண்டு நாட்களுக்கு முன்னர்..ஏதோ..ஒரு மோகம்..ஏதோ..ஒரு தாகம்..னு...ஒரு பாடலும்...... 19 வருடத்திற்கு..முன்...பார்த்த பெண்ணின்..போட்டோவையும் ...... இதோ.. நந்தாவையும் மிக நெருக்கத்தில் பார்த்து...ஓரளவுக்கு..புரிந்துக்கொண்டார்...ஆனாலும்..வீட்டில்.. எப்படி...எப்படி...இதை.... ...ஆழ்ந்த யோசிப்பில்... ஒரு முடிவிற்கு..வந்தவராய்...
வீட்டு அட்ரஸ் கொடுத்து பார்க்க வரச்சொன்னார்.. தன்னுள்..ஊறிக்கிடந்த மூன்று... கதைகளை... நந்தாவிடம்...சொல்லி... ஹாலில்... நீயே....சொல்லு...என்று...
இனி தானும் படம் எடுக்கனும்... தன் பிள்ளைகளை வைத்தே என்ற முடிவுக்கு வந்தார்........ என்பது... யாருக்குத் தெரியும்... தங்கதுரை... நந்தா... இப்போ...உங்களுக்கு...
--
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
( குறிப்பு: டிவி சீரியலை..பார்ப்பதை விட...நாமும்..கதை...கட்டலாமான்னு..ஒரு யோசனையின்...பின்னே... எழுந்தது தான் இந்தக் கதை....)
No comments:
Post a Comment