உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Thursday, March 03, 2011

மரியாதை - தியேட்டரில் பார்த்த கடைசி படம் இன்றுவரையில்


1990 - கல்லூரி நாட்களில் இயக்குனர் விக்ரமன் படம் என்றால் ஓடிப்போய் பார்த்து வந்த நாட்கள் அதிகம்...

இந்த திரைப்படத்தை ரமேஷ்கண்ணாவின்...நகைச்சுவைகளுக்காக போய் பார்த்தேன்... 

என்னோட ரசனையா இல்லை விகரமன் சாரின் படைப்பின் பாதிப்பா... மரியாதை படம்... இன்று வரையில் கடைசியான பார்த்த படமா  அமைந்துவிட்டது...

இப்போ புதுப்புது இயக்குனர்கள்...புதுப்புது நடிகர்கள்.... கலைமாமணி வாங்கிய தமிழ் பேசா நாயகிகள்..

சினிமாவை தியேட்டரில் போய் பார்க்க முடியாமல் போய்விட்டது... என்னை மாதிரி எத்தனை பேரோ எனக்குத் தெரியாது..

ஒன்று மட்டும் உண்மை... இலவசமா.. டிக்கெட் கொடுத்து போய் சினிமா பாரடான்னு...யாரவது கொடுத்தாலும் நான் போய் பார்க்கமாட்டேன்..

அந்த மூன்று மணி நேரத்தில்... ஒரு சிறுகதையோ அல்லது இரண்டு கவிதைகளையோ எழுதிவிட்டு..எனக்கு நானே... யோசிப்பேன்.. 



No comments: