உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, March 18, 2011

வீட்டுக்கு வீடு வாசற்படி

ஏய் போய் படி...முழு ஆண்டு தேர்வை வச்சிகிட்டு...டிவி பார்க்க ஹாலுக்கு வரீயே...உனக்கு புத்தி இருக்கா...மகளை திட்டும் அம்மா

ஏய் இன்னும் சவுண்ட வையிடி..இவளே....  பாட்டியின் கத்தல்

அம்மா...இந்த சம்ம போடவே முடியல...எப்படின்னு சொல்லிக்கொடும்மா... சிணுங்கும் கடைக்குட்டி...

போய்...உங்க அப்பாகிட்டே...கேளு... அவருக்கு தான் இதெல்லாம் தெரியும்...

ட்ரிங்க்...ட்ரிங்க்...ட்ரிங்க்....

ச்சே...இந்த போன்...வேற....நேரங்காலம் தெரியாம....

அலோ...அம்மா...நீயா...சரி..இன்னும் 10 நிமிசம் கழிச்சு...பேசும்மா... இப்ப தான் கங்காவுக்கு குழைந்தை உண்டாகும்னு..ரிப்போர்ட்...வந்திருக்காம்..

அப்படியாடி.... எங்க...வீட்ல..கரண்ட்..கட்  ஆயிடுச்சே... அதான்..உன்னைய..கேட்டேன்..  போனிலேயே..கதையைக்.கேக்கும் அம்மா...

ச்சே...ச்சே....ச்சே... ஜனங்க...எப்ப தான்..மாறப்போறாங்களோ...

No comments: