இது அப்பா கேரக்டர்.. ஜோடியா நடிக்க தமிழ்நாட்டுல நடிகைகளுக்கு பஞ்சம் அதனால்..ஹேமாமாலிணி.. அப்பா பரட்டை கூட ஆட்டம் போடறாங்க... இவருக்கு இரண்டு பிள்ளைங்க.. இரண்டு பெரும் விளையாட்டு பசங்க...அப்படி ஒரு ரொமாண்டிக் கதாநாயகர்கள்..
முதல் பையன் எப்ப பாரு கம்ப்யூட்டரே..கதி என்று இருக்கின்ற சாப்ட்வேர் இஞ்சினியர்.. மாச சம்பளமே..கோடியை தாண்டிடும்... தினமும்..மாலை ஆரு மணிக்கு ஆபிஸ் விட்டதும்.. இன்னிக்கு தேதியில யாரு 2 பேரு புக் பண்ணியிருக்காங்களோ..அவங்களோட. கார்ல .டேட்டிங்.. போகும்பொழுது ஒருத்தர் கூட பேசிகிட்டே போவாரு..அப்படியே ரிடர்ன் ஆகும்பொழுது அடுத்த பார்ட்டி கூட பேசிகிட்டே வருவாரு, ரொம்ப ரொம்ப ஜாலியான ஆளு...ஒரு தடவை பஒரு பார்ட்டி கிட்டே பேசிட்டார்னா..கழுத்துக்கு பின்னாடி ஒரு சின்ன பச்சை குத்திட்டார்னா..அதுக்கப்புறம் அந்த பார்ட்டி இவர் எதிர்ல வரவே வராது.. 60 வயது வரைக்கும் வாழ தேவையான பனத்தை ஒரே நாள்ல வந்திடும்னா பாருங்க... ஆனா பாருங்க அப்பா இவருக்கு தீபிகா படுகோனை..ஜோடியா போட்டுட்டார்..
இது ரெண்டாவது பையன்... இவரும் கொஞ்சம் பக்திமான்..எப்பொழுது பார்த்தாலும் கோயில், யாத்திரைன்னு...போயிட்டு இருப்பார்.. அப்பா சம்பாதித்து கொடுத்த பணத்தில.. அமோக வாழ்க்கை வாழும் மனிதர்.. ஜோடியாக இலியானா... ஆமா..கோயிலுக்குள்ளாற போகிற வரைக்கும் இலியானா இடுப்பினை பிடித்தே ஆட்டம் போட்டு வரும் இளம் காளை.. இந்தியாவில் இருக்கிற எல்லா சாமியார்களின் பெயர்களையும்...அவர்களின் அந்தரங்க நெம்பர்கள்.. அவர்களை பற்றிய எல்லாவிதமான ரகசியங்கள்..இவரிடம் இருக்கும்.
இந்த இரண்டு பிள்ளைகளில் யார் அடுத்த தமிழக முதல்வர் என்பதே...மூலக்கதை.. எப்படியெல்லாம்.. ஆட்டம் ஆடி.. மக்களை நம்ப வைத்து.. கோடிகளில் பறந்து வாழப்போவது தான் இந்த படத்தின் கதை...
ஆக இந்த படத்தில் மொத்தம் 18 பாடல்கள்..அப்பா..பிளாஷ்பேக்கில் ஒரு 6 பாடல்கள், முதல் பிள்ளைக்கு 6 பாடல்கள்..அடுத்து இரண்டாவது பிள்ளைக்கு 6 பாடல்கள்.. இந்த 18 பாடல்களும் புது பாடல்கள் அல்ல,.. பதினாறு வயதினிலே..பரட்டை ஏற்கனவே..நடித்து..ரொம்ப ரொம்ப ஹிட் ஆன..பாடல்களை..ஓடவிட்டு...மூன்று ஜோடிகளையும் ஆடவிடுகின்றார்..இயக்குனர்..
நடிகர் & நடிகைகளின் சம்பளத்திலேயே.. 100 படங்களை..எடுத்துவிடலாம்னு...புதுசா வந்திருக்கும் கிராமத்து இயக்குனர்கள்..சொல்லிக்கொண்டு உள்ளனர்..
---
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
Focus to Solutions...Not to Problems..
No comments:
Post a Comment