எப்ப ஆச்சி?
தெரியல... இன்னிக்கு விடியற்காலை தான்...நினைக்கிறேன்.. ஆனா ரெண்டு மூனு நாளா.. சார பார்க்கவே...ரொம்ப டென்சனா..இருக்காப்பல தெரிஞ்சது...
ஜீப் டிரைவரின் குரலில்.. பழகிய மரியாதை..படக் படக்..என அடித்துக்கொண்டே..இருந்தது..
போங்க... ம்ம்ம்ம் ... போங்க... அப்பால.......கான்ஸ்டபள் கண்ணன்... ஒரு கையில் மக்களை..நோக்கியும்..மறு கையால்... கண்ணை.. துடைத்தவாறு...
நான் என்னங்க.... பாவம் செஞ்ச?...இப்படி பாவி மனுசன்... ரெண்டு புள்ளைகளை..அம்போன்னு விட்டு போயிட்டாரே....மனைவியின் கதறல்... எமனையே..அவசரமா எடுத்திட்டோமோன்னு யோசிக்க வைத்தது...
டேய்... மாடசாமி...டேய்..மாடசாமி... ஏன் டா...இப்படி... அப்பனை..ஆத்தாளை...பொண்டாட்டி..புள்ளைகளை... விட்டுட்டு போக..மனசு வந்தது.... பத்து மாதம்...சுமந்தவளின்...அழுகை... அந்த இறைவனுக்கே...கூட..கேட்டிருக்கும்... அவ்வளவு...கதறலும்...ஒப்பாரியும்... சேதி கேட்டு...புலம்பி...புலம்பி...பார்க்கவே...மனதை..பிழிந்தது..
அந்தக்கால....போலிஸ்..ஏட்டு... நம்ம புள்ளைய...இப்படியா..பார்க்கணும்... ஐயோ....ஐயோ... எனக்கு கொள்ளி..போட பிறந்தவன்... இப்படி போயிட்டானே.....யாரை..எப்படி ஆறுதல்...சொல்ல வழியற்றவராய்.... வாயில்... துண்டை..வைத்து...பார்த்த பார்வையில்.... என்னவோ செய்தது...
பத்திரிக்கை நிருபர்கள்... போட்டி போட்டு.... தங்கள்..கேமராவில்...எல்லாவற்றையும்..பதித்துக்கொண்டனர்.... அந்த பத்திரிக்கை..நிருபர்களில்..ஒருவனின்,,கண்களில்..மட்டும்...ஏதோ..ஒரு வெறி...தன் கையாலாகாத்தனம்... கையினை தரையிலும்.. சுவத்திலும்.. ஓங்கி...அறைய வைத்தது..
இறந்தவன்..அவனின்..நெடு நாளைய..நண்பனல்லவா... ஒரு 3 பேரு..கொடுத்த டார்ச்சர்..அல்லவா...இவனை..இப்படி...போகவைத்தது... ச்சே....ச்சே... என்ன படித்து...என்ன .... எவனெவனுக்கோ...பயந்து...நடுங்கி...சாகவேண்டியதாக...இருக்கே...
ஆட்சியில் உள்ளவர்கள்... மேலதிகாரிகளுக்கு... பிரஷ்ஷர்.... மேலதிகாரிகளோ... இடைப்பட்ட..அதிகாரிகளுக்கு.. கடுமையான..பிரஷ்ஷர்.... கடைசியில்... ரௌடியிஸம்..வாழ்கிறது... போலிஸம்..சாகிறதே...
ஆமாம்..அந்த 3 மேலதிகாரிகள்...யார்....?.. ஆனந்த்... கடைசியா..மாடசாமி... சொன்ன 3 பேர்களை... நினைவுபடுத்தினான்..
சங்கர்....சலீம்....சைமன்....
சங்கர்......சொன்னது...அவங்க ஆளுங்களை...விட்டு விடு...
சலீம்........ சொன்னது...அவங்க..ஆளுங்களை...விட்டு விடு...
சைமன்..... சொன்னது..அவங்க..ஆளுங்களை..விட்டு விடு...
இவனுங்க...3 பேரும்...கடைசியா... மிரட்டியே.. இன்ஸ்பெக்டரே சாகடிச்சாங்களே...
அடப்பாவிகளா.... அவங்க..அவங்க...அவங்க..அவங்க..வேலைய..பார்த்திட்டு..போயிருந்தா... இப்படி போலிஸ்காரனுங்க... தற்கொலையை... நடக்குமா?
ஆனந்துக்கு தெரிந்தால்... மட்டும்... என்ன ஆகிடப்போகிறது... இவனுங்க..3 பேர காப்பாத்த...அவங்கவங்க மொத்த....சமுதாயமே இருக்கே..
--
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
No comments:
Post a Comment