சிறப்பாய் கொடுத்தாய்
அம்மா இவ்வுலகில் என்னை!
சிறப்பாய் வளர்த்தாய்
அப்பா இவ்வுலகில் என்னை!
சிறப்பாய் வளர்ந்தாய்
அக்கா இவ்வுலகில் என்னுடன்!
சிறப்பாய் பயிற்று வித்தாய்
குருவே இவ்வுலகில் என்னை!
சிறப்பாய் வந்தாய் என் இறைவா
சிதறும் உள்ளங்களூக்கு உன்
அருளைக் கொடுத்து எங்களை
வாழவிடு! இவ்வுலகில்!
அழும் குழந்தைகளின்
அழுகையை போக்கிவிடு!
அதனை எங்கள் கரங்களால்
நிறுத்தும் சக்தி கொடு!
ஏங்கும் குழந்தைகளுக்கு
எல்லா வரமும் கொடு!
மனதில் எல்லையில்லா
அன்பை மட்டும் கொடுத்துவிடு!
அதை வெளிப்படுத்தும்
ஆற்றலையும் கொடுத்துவிடு!
எடுத்தது போதும் இனி
எந்த உயிரையும் எடுக்காதே!
அன்புடன் இளங்கோ
1 comment:
அன்பின் இளங்கோ
அம்மா அப்பா அக்கா குரு என்று எல்லோரையும் நமக்குக் கொடுத்த இறைவன் இன்னும் கேட்பவை அனைத்தும் அருள்வான் - நல்வாழ்த்துக்ள்
நட்புடன் சீனா
Post a Comment