ஏழேழு ஜென்மங்கள்
அம்மா வரவேண்டும்
எம்முடன் கைகோர்த்து!
ஆடி மாதத் திருவிழாவில்
கேட்டதையெல்லாம்
வாங்கிக் கொடுத்த என்
அம்மாவே!
உன் புடவையாவது என்னிடம்
கொடுத்துவிடு ஆழ்மன ஆசையில்
அதையாவது என்மீது
தடவி உன் வாசத்தை
உணர்வேன்! தினம் தினம்!
பார்த்து பார்த்து ஊட்டிய
என் அம்மாவே!
உன் குடலுக்கு ஏனிந்த வலி
உன் வலியில் நான்
அழுகின்றேன்!
இறைவா என்னை ஈன்ற
என் அம்மாவின் வலி
அத்தனையும் என்னிடமே
கொடுத்துவிடு!
இனி அம்மாவின் கண்ணில்
நீர் இல்லை வழிய!
அன்புடன் இளங்கோ
1 comment:
அம்மாவைப் பற்றிய அழகிய கவிதை
நல்வாழ்த்துகள் இளங்கோ
நட்புடன் சீனா
Post a Comment