இவ்வுலகில்
யாரும் நிரந்தரமில்லை!
இறைவன் படைக்கின்றான்
ஆட்டங்களை ஆடவிட்டு
சிரிக்க வைக்கின்றான்
சிந்திக்க வைக்கின்றான்
சிலிர்க்க வைக்கின்றான்
சிதைக்கு தீ வைக்க
கற்றுக் கொடுக்கும் இறைவன்
நம்மையும் சிதையாக்கும்
வித்தை வைத்திருக்கின்றான்!
பிடித்தவர்களை வரவைத்து
கொல்கிறான்!
பிடிக்காதவர்களை வாழவைத்து
கொல்கிறான்! இறைவன்!
ஆட்ட நாயகனே வரம் கொடு
சாகா வரம் கொடு!
சக்தி கொடு எல்லோரும் வாழ
சக்தி கொடு!
அழுகையில் இளங்கோ
1 comment:
பிறப்பென்று இருக்கும் போது இறப்பும் உண்டு இளங்கோ - தாங்கிக் கொள்ள வேண்டும் - வரவைத்தும் வாழவைத்தும் கொல்கிற அன்பு அவனிடம் தான் உண்டு -
சோகம் தவிர்க்க வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Post a Comment