உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, August 03, 2007

கி.பி.2039.....

அதிகாலைப் பொழுதில்
அவள் அடுப்படியில்
இரு மகள்கள் துணையுடன்...
அம்மா பூஜையறையில்....
அழகு மகளின் மகள்..
வாசலில் பூக்கோலமிட்டு
அடுத்த மகளின் மகள்
கோலத்தில் வர்ணமிட்டு....
அப்பா செய்தித் தாளில்...
முதல் மருமகன் யோகாவில்
அடுத்த மருமகன் உடல்பயிற்சியில்...
மாட்டுத் தொழுவத்தில்...
ம்மா... என்றழைக்கும் கன்றுக் குட்டிகள்...
அதனை நாக்கால் நக்கியவாறு பசுக்கள்...
சேவல்களின் கொக்கரிப்பு...
க்கூ... க்கூ... என்றைக்கும் குயில்கள்....
.
.
.
.
.
என் எழுபது வயதில்...எப்படியிருப்பேன்
என்று நினைத்துப் பார்க்கின்றேன்....

இறைவா உன் கையில் தான் உள்ளது

இக்காட்சியை உண்மையாக்கு.....

அன்புடன் இளங்கோ, சென்னை

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் இளங்கோ

இவ்வரிய காட்சி நிறைவேற இறைவனின் துணை எப்பொழுது இருக்க, கருணை மழை பொழிய நல்வாழ்த்துகள் இளங்கோ

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அவள் அடுக்களையில் - மற்ற அனைவரும் .......
இளங்கோ என்ன செய்கிறார் - சொல்லவே இல்லையே - இயல்பான சிந்தனை - அழகு மகளின் மகள் - அடுத்த மகளின் மகள் - ம்ம்ம்ம்ம்ம்

இளங்கோவிற்கு மகன் பேரன் என்பதெல்லாம் பிடிக்காதோ

நல்வாழ்த்துகள் இளங்கோ
நட்புடன் சீனா