உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்..இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது..உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும்.குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூடவலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்...வந்தவர்கள்...ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்...பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..
அவர் வந்தார் என்று அறிந்ததும் விழிகள் மூடிய நிலையில் கண்மணிகள் மட்டும் இங்கும் அங்கும் நடனமிட்டன!
வந்தவன்.. கண்மணிகளின் நாட்டியத்தில் லயித்துப் போய் சொன்னான் ...... அடியே.. நீ விழித்துப் பார்ப்பதை விட கண்மணிகளின் உணர்வில் பார்க்கின்றாயே இதுவே உன் அழகு!
திறக்கவும் முடியாமல் அவள் ! இருக்கவும் முடியாமல் அவன் ! கண்மணீகளின் கெஞ்சலில் அவள் ! ஆட்டத்தின் இரசிப்பில் அவன் ! .................................................. ................................................... திணறல்களின் தீர்ப்பில் அவர்கள் தங்களை மறந்தனர்!
தேடித் தேடி அலைந்த வேளைகளில் என்னையே தொலைத்திருக்கின்றேன் சில சந்தர்ப்பங்களில்
அம்மாவைத் தேடிய பொழுது அக்கா எட்டிப் பார்த்து என்ன வேண்டும் என்பார்கள் - ஒன்றுமில்லை என்பேன் புரிந்துக் கொண்டு போய்விடுவாள் அக்கா!
அப்பாவைத் தேடும் பொழுது அம்மா எட்டிப் பார்த்து என்ன என்பார்கள் என் அமைதியைப் பார்த்து அமைதியாகி விடுவார் அம்மா!
அக்காவைத் தேடிய பொழுது மாமா என்ன மச்சான்? கேட்கும்பொழுதே நழுவி சென்றுள்ளேன்!
மனைவியைத் தேடும் பொழுது மகள் எட்டிப் பார்த்து என்னப்பா என்பாள் ஏதும் சொல்லாமல் இருப்பதைப் பார்த்து உள்ளே ஒடிவிடுவாள்!
இவர்களிடம் இன்னது தான் என்று பேசாமல் சென்றாலும் ................... வழியில் தெரியும் கடவுளைப் பார்த்ததும் என்னென்னவோ கேட்டு பேசுகின்றேனே!
அல்லா, இயேசு, முருகன்.. இவர்கள் எங்கே தெரிந்தாலும் எப்படிப் பார்த்தாலும் சரியாக என்ன வேண்டும் என்றும் கேட்கின்றனர்- கேட்டதைத் தான் கொடுத்தனர்.....
வரும் 10-10-2006 ல் என் பிறந்த நாளில் மறைந்து போன மாமாவின் வாழ்த்து வேண்டும் என்றால் மாமாவை பேச அனுப்புவார்களா?
ஒவ்வொரு வருடமும் எனக்கும் முன்னரே விழித்து அக்டோபர் 10 ந் தேடிகளில்.. வாழ்த்துச் சொன்ன என் மாமா இந்த வருடம் முதல் என்னை வானத்திலிருந்து வாழ்த்த போய்விட்டாரே தன் 46 வயதில்!
அவரையும் தேடி அலைகின்றேன் என்னை தேடும் நேரங்களில்!
மாமா --- அன்புடனில் .. எனக்கு உதவும் உறவுகளாக...நண்பர்கள் வருவார்கள் என்று முன்பே தெரிந்து தான் விண்ணுலகம் சென்றுவிட்டாயோ!
வாழ்த்துங்கள் மாமா! அன்றும் உங்களின் வாழ்த்துக்கள் வானதேவர்களோடு வரவேண்டும் என்று வேண்டுகின்றேன்!
14 comments:
நூறூ துடிப்பான
இளைஞர்களை
கொடுங்கள்
இந்தியாவை
மாற்றுகின்றேன் என்றார்
விவேகானந்தர்!
இன்று
பல ஆயிரம் துடிப்பான
இளைஞர்கள்
இருந்தும்
அழைத்துக்
கொள்ள ஒரு
விவேகானந்தரும்
இல்லை!
இளைஞர்களே
இனி நாம் தான்
விவேகானந்தர்கள்
புறப்படுங்கள்
இந்தியாவை
மாற்ற!
கவலை?
கவலையற்ற மனிதா
மனம் கனவு உணர்வு
இல்லம் வாழ்க்கை எல்லாம்
உனக்கும் உண்டா?
உன்னை போலவே எனக்கும்
கவலை வேண்டாம்!
அழைத்துக் கொள்கின்றாயா
உன்னுடன்! நட்புக்காக!!!
- அன்புடன் இளங்கோ
வருடும் காற்று
பொழியும் மழை
பொங்கும் கடல்
ஓடும் நதி
வரும் கீதம்
இவைகளில்
நான்
வரவில்லையே!
உடலோடு படைத்து
உயிரோடு கிடைத்தும்
இந்த
உலகிற்கு ஏதும்
செய்யாமல்
வாழ்கின்றேன்!
அடுத்த பிறவியாவது
அழாமல் இருக்க
வேண்டுகின்றேன்!
பிறந்ததற்காக வாழ்கின்றேனா?
வாழ்வதற்காக பிறந்தேனா?
புரியும் முன்னரே
முடிந்து விடுகின்றதே
இப்பிறவி!
யாரைப் பார்த்தாலும் யார் என்றே
கேட்டு பழகிய மனசு
என்னைப் பார்த்தே யார் என்று
கேட்கும் பொழுது
என்னைத் தேடி தெருவில்
அலைகின்றேன்! நான்!
இனி வரும் பிறவி
அவன் தரும் பிச்சை!
அதிலாவது மனசு
அமைதியாய் இருக்க
மனசிடம் மன்றாடுகின்றேன்
வளர்பிறை !
தேய்பிறை !
நாட்கள் பார்த்திராத
என் பள்ளிக் கூட
வாழ்க்கையே
நன்றாக இருந்தன!
இன்று...
மூச்சி விடவும்
சகுனங்கள்
பார்க்கும் நிலையில்
வாழ்க்கை நன்றாக
இல்லை!
மங்கையின் பார்வையில்...மணாளன்
அவர் வந்தார்
என்று அறிந்ததும்
விழிகள் மூடிய நிலையில்
கண்மணிகள் மட்டும்
இங்கும் அங்கும்
நடனமிட்டன!
வந்தவன்.. கண்மணிகளின்
நாட்டியத்தில் லயித்துப் போய்
சொன்னான் ......
அடியே..
நீ விழித்துப் பார்ப்பதை விட
கண்மணிகளின் உணர்வில்
பார்க்கின்றாயே இதுவே
உன் அழகு!
திறக்கவும் முடியாமல் அவள் !
இருக்கவும் முடியாமல் அவன் !
கண்மணீகளின் கெஞ்சலில் அவள் !
ஆட்டத்தின் இரசிப்பில் அவன் !
..................................................
...................................................
திணறல்களின் தீர்ப்பில் அவர்கள்
தங்களை மறந்தனர்!
- அன்புடன் இளங்கோ
நிஜத்தை மறந்து
நிறத்தை பார்க்கும் மக்களே
உயிரின் நிறமென்ன?
சொல்லுங்கள்
உனக்கு கவிதை பிடிக்குமா?
என்று கேட்டேன்
இல்லையென்றாள்!
உனக்கு சினிமா பிடிக்குமா?
என்று கேட்டேன்
இல்லையென்றாள்!
உனக்கு கதை பிடிக்குமா?
என்று கேட்டேன்
இல்லையென்றாள்!
உனக்கு பாடத் தெரியுமா?
என்று கேட்டேன்
இல்லையென்றாள்!
உனக்கு ஆடத் தெரியுமா?
என்று கேட்டேன்
இல்லையென்றாள்!
கோபப் பட்டு உனக்கு
என்ன தான் பிடிக்கும் என்று கேட்டேன்?
அவள் அமைதியாக...
என்னை பிடிக்கும் என்றாள்!
அவளின் இரசனை என்னவென்று
சொல்லுவேன்?
அன்புடன்
இளங்கோவன்
பெற்றோர்களே!
உங்களை யாரென்று
அறியாமலே
உங்களின் பெற்றோர்
இணைத்து வைத்தனர்
எங்களை யாரென்று
அறிந்தும் .....................
இணைக்க மறுக்கின்றீர்களே
என்ன நியாயம் இது?
(எந்த பெற்றோருக்கும் பொருந்தும்)
தேடித் தேடி அலைந்த வேளைகளில்
என்னையே தொலைத்திருக்கின்றேன்
சில சந்தர்ப்பங்களில்
அம்மாவைத் தேடிய பொழுது
அக்கா எட்டிப் பார்த்து என்ன வேண்டும்
என்பார்கள் - ஒன்றுமில்லை என்பேன்
புரிந்துக் கொண்டு போய்விடுவாள் அக்கா!
அப்பாவைத் தேடும் பொழுது
அம்மா எட்டிப் பார்த்து என்ன என்பார்கள்
என் அமைதியைப் பார்த்து
அமைதியாகி விடுவார் அம்மா!
அக்காவைத் தேடிய பொழுது மாமா
என்ன மச்சான்? கேட்கும்பொழுதே
நழுவி சென்றுள்ளேன்!
மனைவியைத் தேடும் பொழுது
மகள் எட்டிப் பார்த்து என்னப்பா என்பாள்
ஏதும் சொல்லாமல் இருப்பதைப் பார்த்து
உள்ளே ஒடிவிடுவாள்!
இவர்களிடம் இன்னது தான் என்று
பேசாமல் சென்றாலும்
...................
வழியில் தெரியும் கடவுளைப்
பார்த்ததும் என்னென்னவோ
கேட்டு பேசுகின்றேனே!
அல்லா, இயேசு, முருகன்.. இவர்கள்
எங்கே தெரிந்தாலும்
எப்படிப் பார்த்தாலும்
சரியாக என்ன வேண்டும் என்றும்
கேட்கின்றனர்- கேட்டதைத் தான்
கொடுத்தனர்.....
வரும் 10-10-2006 ல் என் பிறந்த நாளில்
மறைந்து போன மாமாவின் வாழ்த்து வேண்டும்
என்றால் மாமாவை பேச அனுப்புவார்களா?
ஒவ்வொரு வருடமும்
எனக்கும் முன்னரே விழித்து
அக்டோபர் 10 ந் தேடிகளில்..
வாழ்த்துச் சொன்ன என் மாமா
இந்த வருடம் முதல்
என்னை வானத்திலிருந்து
வாழ்த்த போய்விட்டாரே
தன் 46 வயதில்!
அவரையும் தேடி அலைகின்றேன்
என்னை தேடும் நேரங்களில்!
மாமா --- அன்புடனில் ..
எனக்கு உதவும் உறவுகளாக...நண்பர்கள்
வருவார்கள் என்று முன்பே தெரிந்து தான்
விண்ணுலகம் சென்றுவிட்டாயோ!
வாழ்த்துங்கள் மாமா!
அன்றும் உங்களின் வாழ்த்துக்கள்
வானதேவர்களோடு வரவேண்டும்
என்று வேண்டுகின்றேன்!
- அன்புடன் இளங்கோ
மக்கள்
தெரிந்த இடங்களில்
தெரியாத முகங்கள்
அலுவலகம்
தெரிந்த இடத்தில்
தெரிந்த முகங்களில்
தெரியாத எண்ணங்கள்
இல்லத்தில்
தெரிந்த இடத்தில்
தெரிந்த முகங்களில்
தெரிந்த எண்ணங்களில்
தெரியாத சிக்கல்கள்
விசித்தரமான உலக வாழ்க்கையடா!
அன்புடன் இளங்கோ
அவனும் அவளும்
அவள்: நீ யாரென்று காட்டு
உன் பின்னால் நூறு பேர் வருவார்கள்
அவன்: நான் யாரென்று காட்டினால்
ஆயிரம் பேர் கூட வருவார்கள்
ஆனால்........
நான் திரும்பி வருவேனா?
- அன்புடன் இளங்கோ
முரண்பாடுகள்
அழுதுக் கொண்டே
பிறக்கும் உயிரை
சிரித்துக் கொண்டு
பார்க்கின்ற நாம்.......
சிரித்துக் கொண்டே
இறக்கும் உயிரை
அழுதுக் கொண்டு
பார்க்கின்றோம் நாம்........
ஏன் இந்த முரண்பாடு இவ்வுலகில்
அவளின் எண்ணம்:
மனிதனே!
உன் சட்டையில்
உள்ள பூக்களே
சிரிக்கும்பொழுது
உன் முகத்தில்
ஏனோ இறுக்கம்!
அவனின் எண்ணம்:
பெண்ணே
உன் புடவைப் பூக்கள்
மலரும் வேளையிலும்
உம்முகத்தில்
ஏன் கவலை!
இவர்களின் எண்ணங்கள்:
தான் சிரிக்கவிட்டாலும் எதிரில்
உள்ளவர் சிரிக்கவேண்டும்
எந்நேரமும்!
எண்னங்களில் ஒற்றுமை !
செயல்களில் வேற்றுமை !
இதுதான் உண்மையான வாழ்க்கை இன்று
Excellent work. I never thought that you do write poem. Keep going.
Post a Comment