அன்பைக் கொடு
அறிவைக் கொடு
அழகைக் கொடு
ஆனந்தம் கொடு
ஆற்றலைக் கொடு
ஆசையைக் கொடு
இன்பத்தை கொடு
இசையைக் கொடு
இயன்றதைக் கொடு
ஈன்றவளுக்கு மகிழ்வைக் கொடு
உறக்கம் கொடு
உழைப்புக் கொடு
உறவைக் கொடு
ஊக்கம் கொடு
எளிமை கொடு
ஏற்றம் கொடு
ஐயம் போக்கும் வழி கொடு
ஒற்றுமை கொடு
ஓயாமல் கொடு
அன்புடன் இளங்கோ
1 comment:
கேட்டவை கிடைக்க நல்வாழ்த்துகள் இளங்கோ
நட்புடன் சீனா
Post a Comment