பூவே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட வாசம்
கொண்டவள் என்றா?
தென்றலே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட சுகமாகத்
தொடுவாள் என்றா?
தூறல் சாரலே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட அதிக
மகிழ்வைக் கொடுப்பாள் என்றா?
தித்திக்கும் தேனே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட அதிக
தித்திப்பைக் கொடுப்பால் என்றா?
ஏனென்றே தெரியவில்லை
உங்களுக்கெல்லாம்
அவளின் மீது கோபம்?
உங்களையெல்லாம் அவளினுள்ளே
வைத்திருப்பதாலோ?
அன்புடன் இளங்கோ
1 comment:
அன்பின் இளங்கோ
அருமை அருமை கவிதை அருமை
பூ, தென்றல், தூறல், சாரல். தேன் அனைத்தௌம் அவளிடம் இருப்பதால் அவள் மீது அனைத்திற்கும் கோபமாம் - கற்பனை வளம் சிறப்பு
நல்வாழ்த்துகள் இளங்கோ
நட்புடன் சீனா
Post a Comment