காலம் மாறி
பருவம் மாறி
உருவம் மாறி போயி
நீ மகள் வீட்டுலேயும்
நான் மகன் வீட்டுலேயும்
இருக்கறப்ப மட்டும்
புரியவேயில்லை
பிள்ளைங்களுக்கு
நம்ம காதல்
காதலர் தினம்
காதலுக்குத்தானாம்
உலகமே சொல்லுது
நாம மட்டும்
ஒருத்தரை ஒருத்தர்
பார்க்க முடியாம...
.........................................
ஒன்னா இருக்கலாம்
வா செல்லம்மா...
முதியோர் இல்லத்துக்கு!
நன்றி: என் தேடலுக்கு...
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
Focus to Solutions...Not to Problems.....
Discussion is always better than Argument....
No comments:
Post a Comment