உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Monday, January 10, 2011

தமிழ் திரைப்பட உலக பிரம்மாக்கள்

தமிழ் திரைப்பட உலகின் பிரம்மாக்களை சற்று அலச ஆரம்பித்தேன்.. அற்புதமான தகவல்கள் கிடைத்தது...

உபயம் : இணைய தளம்

எஸ்.எஸ்.வாசன் : சந்திரலேகா (1948)
என்.எஸ்.கிருஸ்ணன் : மணமகள் (1951)
பீம்சிங் : அம்மையப்பன் (1954)
பி.ஆர்.பந்துலு : தங்கமலை ரகசியம் (1957)
ஸ்ரீதர் : கல்யாண பரிசு (1959)
ஏ.பி.நாகராஜ் : வடிவுக்கு வளைகாப்பு (1962)

பாலச்சந்தர் : நாணல் (1965)


1970 - 1980 கால கட்டத்தில் வந்த பிரம்மாக்கள்.. எண்ணிக்கையில் எட்டு சிறப்பான திரைக்கதை அமைப்பாளர்

பாரதிராஜா : பதினாறு வயதினிலே (1977)
எஸ்.பி.முத்துராமன்: புவனா ஒரு கேள்விக்குறி (1978)
மகேந்திரன் : முள்ளும் மலரும் (1978)
ருத்ரையா : அவள் அப்படித்தான் (1978)
பாலு மகேந்திரா : அழியாத கோலங்கள் (1979)
பாக்யராஜ் : சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)
ஆர்.சுந்தரராஜன் : கிளிஞ்சல்கள் (தகவல் தெரியவில்லை)
டி.ராஜேந்தர் : ஒரு தலை ராகம் (1980)


1981 -1990 காலகட்டத்தில் வந்த பிரம்மாக்கள் எண்ணிக்கை அப்படியே இரண்டு மடங்காக.............

எஸ்.ஏ.சந்திரசேகர்: சட்டம் ஒரு இருட்டரை (1981)
மனோபாலா : ஆகாய கங்கை (1982)
மணி ரத்னம் : பகல் நிலவு (1985)
பாண்டிய ராஜன் : ஆண் பாவம் (1985)
மவுலி : ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது (1985)
யூகி சேது : கவிதை பாட நேரமில்லை (1987)
சுரேஷ் கிருஷ்ணா : சத்யா (1988)
பார்த்திபன் : புதிய பாதை (1989)
விக்ரமன் : புது வசந்தம் (1989)
கே.எஸ்.ரவிகுமார் : புரியாத புதிர் (1990)
ஆர்.கே.செல்வமணி : புலன் விசாரணை (1990)
ஆர்.வி.உதயகுமார் : கிழக்கு வாசல் (1990)
வசந்த் : கேளடி கண்மணி (1990)


1991 - 2000 காலகட்டத்தில் வந்த பிரம்மாக்கள் எண்ணிக்கையில் ஏற்கனவே இருந்தவர்களுடன் 16 இயக்குனர்களை அதிகரிக்க வைத்தன...

அகத்தியன்: மங்கலம் தந்துனானே (1991)கதிர் : இதயம் (1991)
செல்வா : தலைவாசல் (1992)
பி.ஸி.ஸ்ரீராம் : மீரா (1992)
எஸ். சங்கர் : ஜென்டில் மேன் (1993)
நாசர் : அவதாரம் (1995)
ஏ.வெங்கடேஷ் : மஹா பிரபு (1996)
சேரன் : பாரதி கண்ணம்மா (1997)
சீமான் : பாஞ்சாலங்குறிச்சி (1997)
ரமேஷ் கண்ணா : தொடரும் (1998)
சரண் : காதல் மன்னன் (1998)
சசி : சொல்லாமலே (1998)
தரணி : எதிரும் புதிரும் (1999)
பாலா : சேது (1999)
எஸ்.ஜே.சூர்யா : வாலி (1999)
சந்தான பாரதி : வியட்நாம் காலணி(தகவல் தெரியவில்லை)



2001 - 2010 காலகட்டத்தில் வந்த பிரம்மாக்கள் எண்ணிக்கையில் 50 ஐ தாண்டிவிட்டது...

கவுதம் மேனன் : மின்னலே (2001)
காந்தி கிருஸ்ணா : நிலா காலம் (2001)
லிங்குசாமி : ஆனந்தம் (2001)
ஜீவா : 12பி (2001)
முருகதாஸ் : தீனா (2001)
பிரபு சாலமன் : கண்ணோடு கண்பெதல்லாம் (2001)
அழகம் பெருமாள் : டும் டும் டும் (2001)
அமீர் : மவுனம் பேசியதே (2002)
சுசி கணேசன் : விரும்புகிறேன் (2002)
ஹரி : தமிழ் (2002)
தங்கர் பச்சன் : அழகி (2002)
பாலாஜி சக்திவேல் : சாமுராய் (2002)
கரு.பழனியப்பன் : பார்த்திபன் கனவு (2003)
எம்.ராஜா : ஜெயம் (2003)
விஷ்ணுவரதன் : குரும்பு (2003)
வசந்த பாலன் : ஆல்பம் (2003)
விகரம் குமார் : அலை (2003)
ஜோதி கிருஸ்ணா : எனக்கு 20 உனக்கு 18 (2003)
சமுத்ரகனி : உன்னை சரனடைந்தேன் (2003)
செல்வராகவன் : காதல் கொண்டேன் (2003)
பூபதி பாண்டியன் : தேவதையை கண்டேன் (2004)
ராதா மோகன் : அழகிய தீயே (2004)
ஆர்.மாதேஷ் : மதுர (2004)
தியாகராஜன் : ஷாக் (2004)
பேரரசு : திருப்பாச்சி (2005)
பிரியா : கண்ட நாள் முதல் (2005)
திருமுருகன் : எம் மகன் (2006)
எஸ்.பி.ஜெகன்னாதன் : இயற்கை (2006)
சிம்பு தேவன் : இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006)
என்.கிருஷ்ணா : சில்லுனு ஒரு காதல் (2006)
மிஷ்கின் : சித்திரம் பேசுதடி (2006)
தருன் கோபி : திமிரு ( 2006)
சாமி : உயிர் (2006)
சுராஜ் : தலைநகரம் (2006)
வெங்கட் பிரபு : சென்னை 600028 (2007)
வெற்றி மாறன் : பொல்லாதவன் (2007)
ஏ.எல்.விஜய் : கிரீடம் (2007)
சீனு ராமசாமி : கூடல் நகர் (2007)
புஸ்கர் காயத்ரி : ஓரம்போ (2007)
ராகவ லாரன்ஸ் : முனி (2007)
ராஜு சுந்தரம் : ஏகன் (2008)
மித்ரன் ஜவஹர் : யாரடி நீ மோகினி (2008)
ஆர்.கண்ணன் : ஜெயம்கொண்டான் (2008)
மதுமிதா : வல்லமை தாராயோ (2008)
ராம் : கற்றது தமிழ் (2008)
எம். சசிகுமார் : சுப்ரமணியபுரம் (2008)
ராஜேஷ் : சிவா மனசுல சக்தி (2009)
பாபுசிவன் : வேட்டைக்காரன் (2009)
பண்டிராஜ் : பசங்க (2009)
சுசிந்திரன் : வென்னிலா கபடி குழு (2009)


இன்னும் சிலர் பிரதாப் போத்தன், ராமராஜன்,செய்யார் ரவி, என நிறைய இயக்குனர் இப்பட்டியலில் இருக்கின்றனர்...



இன்றைய தேதியில் 100 சினிமா இயக்குனர்களை சென்னை வைத்துக்கொண்டிருந்தும்... எத்தனை திரைப்படங்களை நம்மால் இயல்பாக பார்க்க முடிகின்றது?


என்னுடைய பள்ளி நாட்களிலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி..
கி.பி. 1990 வரையில் ஒரே ஒரு பத்து ரூபாயில் குடும்பம் முழுவதும் (பெற்றோர் மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆக மொத்தம் 4 பேர்) பார்க்க முடிந்தது...


கி.பி. 2000 வரையில் ஒரு நூறூ ரூபாயில் அதே குடும்பம் தரமான திரைப்படத்தினை பார்த்து இரசித்தன....

கடந்த சில வருடங்களாக அதே குடும்பம் ( 4 பேர் மட்டும்) ஒரு தரமான திரைப்படம் பார்க்க குறைந்தது 500 ரூபாய் செலவிடப்படுகின்றது!!!!!!!!!!!!!!!!!!!!


யாரால் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தி வைக்க முடியும்?

No comments: