உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Monday, January 10, 2011

திரு.இராமசெயம், காட்பாடி


வேலூர் மாவட்டம், திம்மம்பேட்டை கிராமத்தில் அவதரித்த முன்னால் ஆசிரியர் இவர். தன் இளம் வயதில் அம்மாவை இழந்தவர்..அப்பா, சிற்றப்பா, அண்ணா, தம்பிகள், தங்கைகளுடன் வாழ்ந்தவர்..வாழ்ந்துக்கொண்டிருப்பவர்...

தம் இளம் வயதில் அதிகமான போராட்டங்களின் இடையே படித்து வாழ்க்கையில் தனக்கென்று ஓர் பாதையை அமைத்துக்கொண்டவர்...

வேலூர் மாவட்டத்தில் அம்பலூர், மிட்டூர், திருப்பத்தூர்,வஞ்சூர் அரசினர் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்...

சிறப்பாசிரியர் பட்டம் வாங்காமலே மாணவர்களுக்காக சிறப்பாக பணியாற்றியர்..இவரிடம் படித்த மாணவர்கள் இன்று உலகமெங்கும் இருக்கின்றனர்...மரியாதையுடன் சில வார்த்தைகள் உரையாடிவிட்டு செல்லும் முன்னால் மாணவர்களைக் கண்டு வியந்திருக்கின்றேன்..

திருமதி. சாந்தகுமாரியை மணந்துக்கொண்டு குடும்பத்திற்காக உழைத்தவர், தங்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளை சிறப்பான குணங்களுடன் வளர்த்தவர்கள் தான் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளனர்.

முதல் குழந்தையாக பெண்ணையும், இரண்டாவதாக ஆண் குழந்தையையும் பெற்றனர்.. அதற்குப் பிறகு ஏற்பட்ட பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று பறிகொடுத்துவிட்டனர்.

இவர்களின் மகன் தான் இந்த இனியவன் இளங்கோவன்.

No comments: