உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Tuesday, January 18, 2011

கே.எஸ்.ரவிகுமார்

1990ல் இருந்து திரைப்படத் துறையில் கலக்கிக்கொண்டிருக்கும் மிகச் சிறந்த இயக்குனர்.  திரு.சரத்குமாருடன் வைத்து இவரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது...


நல்ல கதையினையும், சிறந்த காட்சிகளை அமைத்தும் பார்க்கும் மக்களை மகிழ்விப்பதில் இவர் திறமையானவர் என்பது உலகமறிந்தது தான்...


ஆனால் இவரிடம் ஒரே ஒரு குறை உண்டு 20 வருடங்களாக... என்ன குறை?


இவர் எந்த ஒரு நடிகர்/நடிகையையும் அறிமுகம் செய்யவில்லை தன்னுடைய திரைப்படங்களில்...


ஏற்கனவே கலக்கிக்கொண்டிருக்கும் நடிகரையோ அல்லது நடிகையையோ தான் சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைப்பார்.


இந்த 20 வருடங்களில் 38 திரைப்படங்களை கொடுத்து அனைத்தையும் வெற்றியடைய உழைத்துள்ளார்...


இத்தனை படங்களில்.. குறைந்தது ஒரு நடிகரை அல்லது நடிகையை அறிமுகப் படுத்தி இருந்தால் நமக்கு  புதிய நட்சத்திரங்களாக சிலர்  கிடைத்திருக்கலாம்  என நான் சொல்கிறேன்.


1991ல் எம்.ஐ.டியில் பி.டெக் படித்த காலத்தில், குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் சேரன் பாண்டியன் படம் பார்த்துவிட்டு பரிட்சை எழுதி பாஸ் பண்ணிய நாட்களும் உண்டு.


அதே சமயத்தில் இவர் மிகச் சிறந்த இயக்குனர்களை திரைப்படத் துறைக்கும் கொடுத்துள்ளார்.... இது பாராட்டப்படவேண்டியது தான்.


பார்ப்போம் இனி வரும் காலங்களில்.. ஏதாவது புது நட்சத்திரம் தோன்ற வைப்பாரா என்று?


இவரின் சிஷ்யன் பாலாஜி என்னுடைய நெருக்கமான நண்பர்களில் ஒருவர். எம்.பி.ஏ படித்த காலத்தில் பாலாஜியும் நானும் நட்புக்காக நண்பர்களானோம்...


திரு. பாலாஜி மிகச் சிறந்த திரைப்படத்தினை கொடுத்து பார்க்கும் மக்களை பரவசம் அடைய வைக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றேன்..

No comments: