உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, August 03, 2007

இறைவா எந்த உயிரையும் எடுக்காதே...

சிறப்பாய் கொடுத்தாய்
அம்மா இவ்வுலகில் என்னை!

சிறப்பாய் வளர்த்தாய்
அப்பா இவ்வுலகில் என்னை!

சிறப்பாய் வளர்ந்தாய்
அக்கா இவ்வுலகில் என்னுடன்!

சிறப்பாய் பயிற்று வித்தாய்
குருவே இவ்வுலகில் என்னை!

சிறப்பாய் வந்தாய் என் இறைவா
சிதறும் உள்ளங்களூக்கு உன்
அருளைக் கொடுத்து எங்களை
வாழவிடு! இவ்வுலகில்!

அழும் குழந்தைகளின்
அழுகையை போக்கிவிடு!
அதனை எங்கள் கரங்களால்
நிறுத்தும் சக்தி கொடு!

ஏங்கும் குழந்தைகளுக்கு
எல்லா வரமும் கொடு!

மனதில் எல்லையில்லா
அன்பை மட்டும் கொடுத்துவிடு!
அதை வெளிப்படுத்தும்
ஆற்றலையும் கொடுத்துவிடு!

எடுத்தது போதும் இனி
எந்த உயிரையும் எடுக்காதே!

அன்புடன் இளங்கோ

கொடு இறைவா கொடு

அன்பைக் கொடு
அறிவைக் கொடு
அழகைக் கொடு

ஆனந்தம் கொடு
ஆற்றலைக் கொடு
ஆசையைக் கொடு

இன்பத்தை கொடு
இசையைக் கொடு
இயன்றதைக் கொடு

ஈன்றவளுக்கு மகிழ்வைக் கொடு

உறக்கம் கொடு
உழைப்புக் கொடு
உறவைக் கொடு

ஊக்கம் கொடு
எளிமை கொடு
ஏற்றம் கொடு

ஐயம் போக்கும் வழி கொடு
ஒற்றுமை கொடு
ஓயாமல் கொடு


அன்புடன் இளங்கோ

இறப்பு...

இவ்வுலகில்
யாரும் நிரந்தரமில்லை!

இறைவன் படைக்கின்றான்
ஆட்டங்களை ஆடவிட்டு
சிரிக்க வைக்கின்றான்
சிந்திக்க வைக்கின்றான்
சிலிர்க்க வைக்கின்றான்

சிதைக்கு தீ வைக்க
கற்றுக் கொடுக்கும் இறைவன்
நம்மையும் சிதையாக்கும்
வித்தை வைத்திருக்கின்றான்!

பிடித்தவர்களை வரவைத்து
கொல்கிறான்!
பிடிக்காதவர்களை வாழவைத்து
கொல்கிறான்! இறைவன்!

ஆட்ட நாயகனே வரம் கொடு
சாகா வரம் கொடு!

சக்தி கொடு எல்லோரும் வாழ
சக்தி கொடு!

அழுகையில் இளங்கோ

அம்மா...

ஏழேழு ஜென்மங்கள்
அம்மா வரவேண்டும்
எம்முடன் கைகோர்த்து!

ஆடி மாதத் திருவிழாவில்
கேட்டதையெல்லாம்
வாங்கிக் கொடுத்த என்
அம்மாவே!

உன் புடவையாவது என்னிடம்
கொடுத்துவிடு ஆழ்மன ஆசையில்
அதையாவது என்மீது
தடவி உன் வாசத்தை
உணர்வேன்! தினம் தினம்!

பார்த்து பார்த்து ஊட்டிய
என் அம்மாவே!
உன் குடலுக்கு ஏனிந்த வலி
உன் வலியில் நான்
அழுகின்றேன்!

இறைவா என்னை ஈன்ற
என் அம்மாவின் வலி
அத்தனையும் என்னிடமே
கொடுத்துவிடு!

இனி அம்மாவின் கண்ணில்
நீர் இல்லை வழிய!

அன்புடன் இளங்கோ

நீ வருவாயோ!

சந்தோஷ ரீங்காரத்தில்
சகலமும் சக்தியடைந்தன!

சக்தியின் சக்தியால்
புத்துயிர் பெற்றன உணர்வுகள்!

உணர்வுகளின் ஓசையில் உன்
ரீங்காரமும் இசைந்து பாடிற்று
தினம் தினம்!

தினம் தரும் திடத்தினால்
தடமின்றி தவழ்கின்றேன்!

தழுவிடத் தான் நீ வருவாயோ!

அன்புடன் இளங்கோ

நீயும் நானும்...

என் கனவில்
நீ!
உன் நினைவில்
நான்!
நம்மை மறந்தோம்!
அன்று!

என் அருகில்
நீ!
உன் மனதில்
நான்!
நம்மை மறந்தோம்
நம் கையில்
இரு மழலைகள்!
இன்று!

அன்புடன் இளங்கோ

விவாகரத்துக்கள்

இன்று
விவாகங்கள்
நடப்பது
தள்ளிப்போய்...
.
.
.
விவாகரத்துக்கள்... தான்
நெருங்கிவிடத்
துவங்கிவிட்டது
அனேக தம்பதிகளிடம்.....

வேதனையான வேதங்கள்
மழலைகளிடம்
போதிக்கப்படுகின்றன!

மனித முகங்களில்...
மனிதம்....
இல்லா மனங்களில்...
விவாகரத்து
வெற்றியே கொடுத்தாலும்...
வேதனை தான்!....

அன்புடன் இளங்கோ
பூவே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட வாசம்
கொண்டவள் என்றா?

தென்றலே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட சுகமாகத்
தொடுவாள் என்றா?

தூறல் சாரலே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட அதிக
மகிழ்வைக் கொடுப்பாள் என்றா?

தித்திக்கும் தேனே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட அதிக
தித்திப்பைக் கொடுப்பால் என்றா?

ஏனென்றே தெரியவில்லை
உங்களுக்கெல்லாம்
அவளின் மீது கோபம்?

உங்களையெல்லாம் அவளினுள்ளே
வைத்திருப்பதாலோ?

அன்புடன் இளங்கோ

நமக்காக...

அதிகாலை நடைபயிற்சியும்
அளவான உணவும்
குறைவான பேச்சும் - நம்
ஆயுளைக் கூட்டும்!

இயல்பான நடத்தையும்
இசைவான நட்பும்
உதவும் குணமும் - நம்
உணர்வை வெளிப்படுத்தும்!

சிரிக்கும் மனமும்
சிந்திக்கும் அறிவும்
செழிப்பான வாழ்வும் - நம்
இதயத்தை இதமாக்கும்!

.....

அன்புடன் இளங்கோ, சென்னை

கி.பி.2039.....

அதிகாலைப் பொழுதில்
அவள் அடுப்படியில்
இரு மகள்கள் துணையுடன்...
அம்மா பூஜையறையில்....
அழகு மகளின் மகள்..
வாசலில் பூக்கோலமிட்டு
அடுத்த மகளின் மகள்
கோலத்தில் வர்ணமிட்டு....
அப்பா செய்தித் தாளில்...
முதல் மருமகன் யோகாவில்
அடுத்த மருமகன் உடல்பயிற்சியில்...
மாட்டுத் தொழுவத்தில்...
ம்மா... என்றழைக்கும் கன்றுக் குட்டிகள்...
அதனை நாக்கால் நக்கியவாறு பசுக்கள்...
சேவல்களின் கொக்கரிப்பு...
க்கூ... க்கூ... என்றைக்கும் குயில்கள்....
.
.
.
.
.
என் எழுபது வயதில்...எப்படியிருப்பேன்
என்று நினைத்துப் பார்க்கின்றேன்....

இறைவா உன் கையில் தான் உள்ளது

இக்காட்சியை உண்மையாக்கு.....

அன்புடன் இளங்கோ, சென்னை