வாசித்தவர்
வாழ்த்தும்போது தான் எழுதியவருக்கே
பெருமை வந்து சேரும்.
பார்த்தவர்
பாராட்டும்போது தான்
படைத்தவருக்கே
புகழ் வந்து சேரும்.
கேட்டவர்
வாழ்ந்து காட்டும்போது
தான் பேச்சாளருக்கே
பேர் வந்து சேரும்.
கற்றவர்
கசடற திகழும்போது
தான் கற்பித்தவருக்கே
மகிழ்ச்சி வந்து சேரும்.
இளங்கோவன்
சென்னை 13-3-22, 17:28 hrs.
No comments:
Post a Comment