சதீஸ், வினோத், மனோ
மூன்று பேரும் ஆளுக்கொரு கிளாஸ்ல சரக்கை ஊற்றி, சியர்ஸ் செய்து மடக் மடக்கென உள்ளே தள்ளினர்.
"டேய் சதீஸ் உங்க அப்பாவை, HDFC bank ATM ல நான் பார்ந்தேன்டா" என்ற வினோத்திடம் "அவர் ஏதாவது பணம் எடுக்க போயிருப்பார் டா" பதிலளித்தான் சதீஸ்.
"செக்யூரிட்டி யூனிபார்ம் ல போய், அதே ATM ல பணம் எடுப்பாராடா?" வினோத் கிண்டலாக சொல்லியதும், ஓங்கியெறிந்தான் கிளாசை, எடுத்தான் வண்டியை வீட்டிற்கு.
இரவு 12 மணிக்கு தட்டுத்தடுமாறி வீட்டிற்கு வந்த அப்பாவை பார்த்து ஓவென அழுத பிஈ பட்டதாரியான சதீஸ், வொயிட் காலர் ஜாப் தேடி காலத்தை வீண்டித்த சதீஸ், அன்று முதல் கம்பெனிகளின் படிகளை ஏற துவங்கினான்.
படிப்புக்கு கிடைத்த வேலையில் சேர்ந்து, அப்பாவை வீட்டிலே ஓய்வெடுக்க வைத்தான்.
ஒரே ஒரு நாள் செக்யூரிட்டி டிரஸ் போட்டு, வினோத் எதிரிலே காட்டி, தன் மகனை திருத்திய மகிழ்வில் திளைத்தார் அப்பாவும்.
காலாகாலத்தில் அவனுக்கு கால்கட்டும் போடனும் லைப்லேயும் செக்யூரிட்டி வந்துடும் என்ற முடிவுக்கு வந்தார் சதீஸின் அப்பா.
+++ முற்றும்++++
எழுத்தாளர் இளங்கோவன்
சென்னை, 09-03-2022, 10:50 am.
No comments:
Post a Comment