வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில் எனக்கு ஆங்கில ஆசிரியராக இரண்டு வருடங்கள் 1984 முதல் 1986 வரை பாடம் எடுத்தவர்.
வகுப்பினுள் நுழையும்பொழுதே.. அனைவரையும் சிரிப்புடன் பார்க்க வைக்கும் சக்தி படைத்தவர்.. பாடம் நடத்தும் விதமும்... மனதில் பதிய வைக்கும் விதமும்.. எல்லா மாணவர்களையும் மகிழ வைத்தது உண்மை..
ஜேசிஸ் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்... இன்று கலைஞர் டிவியில்..மனிதவளம் குறித்து அற்புதமாக பேசி வருகின்றார்...
அன்று மாணவர்களை..பாடம் நடத்தி படிக்க வைத்தவர்..இன்று கலைஞர் டிவியில்..பார்க்கும் மக்களையும் மனிதவளம் குறித்து பேசிமனதில் அழகாக பதிய வைக்கின்றார்..
ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும்..சிந்தனையின் வெளிப்பாடு... இன்று...மக்களை..அடைய வைக்கின்றாரே...இதுவே..ஒரு மிகப்பெரிய வெற்றி...
வாழ்த்துக்கள்... டி.கே.எஸ் சார்...
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்)
சென்னை

No comments:
Post a Comment